இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆசிய தரவரிசையில் சரிவு
ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2027இல் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
இதன்படி கொழும்பு பல்கலைக்கழகம் 46 இடங்கள் சரிந்து 364ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகம் 389ஆவது இடத்திலும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 398ஆவது இடத்திலும் உள்ளன.
தரவரிசை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்
மொரட்டுவ பல்கலைக்கழகம் 37 இடங்கள் முன்னேறி 517ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
களனிப் பல்கலைக்கழகம் குறைந்தது 44 இடங்கள் முன்னேறி 687ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தரவரிசையில் இடம்பெற்ற 12 இலங்கைப் பல்கலைக்கழகங்களில் எட்டு பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. தொழில்துறை நற்பெயர், ஆசிரியர் – மாணவர் விகிதம் மற்றும் சர்வதேசத் தொடர்புகள் ஆகியவை இந்த பின்னடைவுக்கான முக்கிய சவால்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மறுபுறத்தில், பிராந்தியப் போட்டியாளர்கள் வேகமாக முன்னேறுவதே இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என கியூஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் எதிர்கால முன்னேற்றத்திற்காக கற்பித்தல் தரம், ஆராய்ச்சி முதலீடு, கல்விப் பணியாளர்களின் மேம்பாடு மற்றும் சர்வதேசக் கல்வி ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கியூஎஸ் வலியுறுத்தியுள்ளது.