;
Athirady Tamil News

சுகாதார வசதிகளின்றி கிளிநொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி வவுனியாயில் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியது: ஒருவர் கைது

0

சுகாதார வசதிகளின்றி கிளிநொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி வவுனியாயில் சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியது: ஒருவர் கைது

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி முறையான அனுமதி பெறாது கொண்டு வரப்பட்ட 30 கிலோ மாட்டிறைச்சி வவுனியா மாநகர சபையின் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று (06. 11) கைப்பற்றப்பட்டுள்ளது

தீபாவளிப் பண்டிகையைக் முன்னிட்டு பொது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், வவுனியா நகரப் பகுதியில் உள்ள பல்வேறு வியாபார நிலையங்களில் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனைகளை முன்னெடுத்தனர்.

​இந்த அதிரடிச் சோதனையில்
புதிய பேரூந்து நிலையப் பகுதியில் பஸ்ஸிலிருந்து முச்சக்கர வண்டிக்கு மாற்றப்படவிருந்த இறைச்சியை, மாநகரசபையின் சுகாதாரப்பரிசோதகர். டீ. ஜே.ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் கைப்பற்றினர்.

இவ் இறைச்சி சுகாதாரப் பரிசோதகர் மேற்பார்வையில் எடை பார்க்கப்பட்டு, மாநகரசபை களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் மாநகர சபையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.