கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை ; ஏனைய பாடசாலைக்கு முக்கிய தகவல்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஈடாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடைபெறும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு இன்று (7) வெளியிட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்ப் பாடசாலைகளுக்கு இந்த விசேட விடுமுறை திங்கட்கிழமை 9ஆம் திகதி வழங்கியுள்ளதாகவும் அதற்கு ஈடாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடைபெறும்.
இதேவேளை ஏனைய பாடசாலைகளான சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் வழமைபோல நவம்பர் 9ஆம் திகதி செயற்படும் எனவும் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.