;
Athirady Tamil News

வவுனியாவில் பாம்பு தீண்டி யுவதி உயிரிழப்பு

0

வவுனியா சின்னப்பூவரசங்குளம் பகுதியில் கடந்த வாரம் பாம்பு தீண்டிய யுவதி ஒருவர்(21) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

பாம்பு தீண்டிய யுவதியை வீட்டிலிருந்து நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. அந்த வீதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதால், அந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதி நெடுங்கேணி வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்களுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.