;
Athirady Tamil News

உலகின் மிக இளைய பதிப்பாசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்த 8 வயது சிறுவன்!

0

லண்டன்,

இங்கிலாந்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவர் ‘அவர் ஸ்டோரீஸ், அவர் வேர்ல்ட்’ என்ற தொகுப்பு நூலை எழுதியுள்ளார். இதனால் உலகின் மிக இளைய பதிப்பாசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனையை அந்த சிறுவன் படைத்துள்ளார்.

சாதனையின் பின்னணி

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்த சிறுவன் ஜேஸ் ஜாய்ஸ். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி அன்று தனது 8 வயது மற்றும் 290 நாட்களில் ‘அவர் ஸ்டோரீஸ், அவர் வேர்ல்ட்’ என்ற தொகுப்பு நூலை எழுதி கின்னஸ் உலக சாதனை படைத்தார். சிறுவர்களிடையே வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட ‘புக்ஸ் பிரம் சில்ட்ரன் டு சில்ட்ரன்’ என்ற முன்னெடுப்பின் கீழ் இந்த நூல் உருவாக்கப்பட்டது.

‘அவர் ஸ்டோரீஸ், அவர் வேர்ல்ட்’ நூலின் சிறப்புகள்

இங்கிலாந்து முழுவதிலுமிருந்து 6 முதல் 10 வயதுக்குட்பட்ட 20 பள்ளி மாணவர்கள் எழுதிய சிறுகதைகள் மற்றும் கவிதைகளை ஜேஸ் ஜாய்ஸ் ஒன்றிணைத்துள்ளார். 50 பக்கங்களைக் கொண்ட ‘அவர் ஸ்டோரீஸ், அவர் வேர்ல்ட்’ (Our Stories, Our World) என்ற இந்த தொகுப்பு நூல், பன்முகத்தன்மை, கற்பனைத் திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகக் கருத்துகளை மையமாகக் கொண்டுள்ளது. பிரசித்தி பெற்ற பர்மிங்காம் நூலகத்தில் நடைபெற்ற விழாவில் இந்த நூல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

சிறுவனின் முந்தைய சாதனைகள்

அதிக நுண்ணறிவுத் திறன் கொண்டவர்களுக்கான ‘மென்சா’ அமைப்பில் உறுப்பினராக உள்ள ஜேஸ் ஜாய்ஸ், தனது 4 வயதிலேயே 2 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும், இங்கிலாந்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பிபிசி ப்ளூ பீட்டர் தங்கப் பதக்கம்‘ மற்றும் ‘பிரிட்டிஷ் சிட்டிசன் யூத் அவார்ட்’ ஆகியவற்றையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.