;
Athirady Tamil News
Daily Archives

8 February 2023

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்- மத்திய மந்திரி தகவல்!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் உயிரை மாய்த்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக சட்டசபையில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கும்…

அதிபரின் விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் ஏர்போர்ஸ் ஒன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் விமானங்கள்…

மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!!

கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா நினைவு…

அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர்!!

login-icon முகப்பு Local அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அக்கிராசன உரை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் By T. SARANYA 08 FEB, 2023 |…

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க…

இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளிற்கு தடையாகயிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்க தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை…

இனப்பிரச்சனைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடனேயே சாத்தியப்படும் –…

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ், முஸ்லிம் மக்களுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தாது சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டுதான் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் சிங்கள பெரும்பான்மை மக்களின் கைகளிலேயே அதற்கான…

அத்தியாவசியமான அரச செலவினங்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி ஆலோசனை!!

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,774,156 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.74 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,774,156 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,528,418 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 649,030,283 பேர்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – 96 பேர் வேட்பு மனுதாக்கல்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான…

மன்னாரிலுள்ள அரச, தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.…

சிக்கலான கேள்விக்கும் சிம்பிளான பதிலை தரும் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கும் கூகுளின்…

இணைய உலகில் தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்னணியில் இருந்து வருகிறது. பொதுவாக, ஆன்லைனில் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு தாமாக பதிலளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு…

டெல்டா பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று…

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க…

யாழ்ப்பாணத்தில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் இன்று புதன்கிழமை(08) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.…

சிறந்த அறிவாற்றல் மாணவியாக 2வது ஆண்டாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு!!

அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மையம் நடத்திய தேர்வில் உலகின் சிறந்த அறிவாற்றல் மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா (13). இவரது…

கேரள பட்ஜெட்டை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம்!!

கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல் மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி…

ஒன்பது மாத குழந்தையை காவு வாங்கிய விபத்து!

குருநாகல் காவல்துறை பிரிவுக்குட்பட்ட குருநாகல் வெவரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று…

புறக்கோட்டையில் ஒன்று கூடிய தொழிற்சங்கங்கள்! – குவிக்கப்படும் இராணுவம் !! (வீடியோ)

தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு…

வீதியில் எரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்ட பிரதி – கொழும்பில் மேலும் பதற்றத்தை…

13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு தேரர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் காவல்துறையினருடன்…

கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!!

கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை – 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஜூம் நிறுவனம்!!

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும்…

சர்ச்சை பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய…

பாராளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பினார். மக்களவையில் கவுதம் அதானியின் நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக…

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 700 ஆக அதிகரிப்பு!!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த…

பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது- மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு!!

மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது அவர், "இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள்.…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விசேட உரை!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இடம்பெற்றுவரும் புதன் காலை ஒன்று கூடல் விசேட உரை நிகழ்வில் (08.02.2023 புதன்) காலை யாழ். போதனா வைத்தியசாலையின் சமுதாய மருத்துவத்துறையின் வைத்தியப் பதிவாளர் டாக்டர்; கே. ஏன். பரமேஸ்வரன் நேருள மனப்பாங்கு என்ற…

பாகிஸ்தானில் சோகம் – பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பலி!!

பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணத்தின் கில்கித்தில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார்…

ஆந்திர இளம்பெண்ணுடன் குடும்பம் நடத்தி 4 குழந்தைகள் பெற்ற பாகிஸ்தான் வாலிபர்!!

ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டம், கடிவேமூ பகுதியை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில் ஒரு மகன் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் குல்சார் கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது…

கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் சுற்றிவளைப்பு!!

கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவிகளை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின்…

மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா?

எச்சில் என்பது நமது வாயை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மட்டும் பயன்படுவது அல்ல. நமது சுவைக்கு பின்னால் உள்ள பிரதான காரணிகள் எச்சிலில் உள்ள பொருட்கள்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை…

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை – பொதுப்பயன்பாடுகள்…

இலங்கை மின்சார சபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை அரசியல் அழுத்தங்களினால் மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை.பதவி வகிக்கும் வரை ஆணைக்குழுவின்…

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரை விட…

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் இருந்த போரை விட ஆபத்தானது எனவும்…

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை விமர்சிக்கின்றனர் : அக்கிராசன உரையில்…

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை விமர்சிக்கின்றனர் என அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய…

மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தியை விமர்சித்து கவிதை வாசித்த மாணவர்: ஆசிரியருக்கு…

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த 5ம் தேதி சிஎம் ரைஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு மாணவர், மகாத்மா காந்தியை விமர்சனம் செய்யும் வகையில் கவிதை வாசித்தார். வன்முறையின்…

ஹூ சத்தம் எழுப்பியவாறு எதிரணி வெளிநடப்பட்டு!!

9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார். இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அமர்வைப் புறக்கணித்துள்ளனர், மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "ராஜசேனா வெறி" என்று கோஷமிட்டவாறு…

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரே அடிக்கப்படுகின்றது. “இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்ற எழுதப்பட்ட…