;
Athirady Tamil News

அமரர் நாகேஸ் சொக்கர் அவர்களின் பிறந்தநாளில், யாசகம் பெறுவோருக்கு உணவு வழங்கல்.. (படங்கள்)

0

அமரர் நாகேஸ் சொக்கர் அவர்களின் பிறந்தநாளில், யாசகம் பெறுவோருக்கு உணவு வழங்கல்.. (படங்கள்)

#################################
புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்ட அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களின் பாரியாரான நாகேஷ் அக்கா என அன்போடு அழைக்கப்படும் திருமதி சீதேவிப்பிள்ளை சொக்கலிங்கம் அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா நகர் பகுதியெங்கும் யாசகம் பெற்று வாழ்வோருக்கு விசேட மதிய உணவினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக அவர்களது குடும்பத்து நிதிப்பங்களில் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா நகரப் பகுதியெங்கும் வீதிவீதியாக அலைந்து திரிந்து யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்ந்து வரும் இவ்வாறானவர்களைத் தேடித் தேடி, அவர்கள் இடம் சென்று உணவுப் பொதிகளை மாணிக்கதாசன் மன்றத்தினர் வழங்கி வைத்தனர்.

வீதிகளிலும் தெருவோரங்களிலும் குடும்பம் குடும்பமாகவும், பெற்ற பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில், ஆதரவற்ற நிலையில், வீதியோர வியாபார நிலையங்களில் ஒதுக்குப்புறத்தில் தமது இறுதி காலத்தை யாசகம் மூலம் வாழும் வயோதிபர்களும் இவ்வாறான நிலையில் வருகின்றனர். இப்படியானவர்களைத் தேடி அவர்களின் ஒருநேரப் பொழுதேனும் வயிறார உண்பதற்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் இவ்வாறான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த அமரர் திருமதி சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களது பிறந்தநாள் நினைவையொட்டி விசேட மதிய உணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தங்கள் நிதி பங்களிப்பின் மூலம் சமூகப் பங்காற்றி வரும் அமரர் சொக்கலிங்கம் முருகேசு குடும்பத்தினருக்கு உதவி பெற்றவர்களது சார்பாக அமரர் சொக்கலிங்கம் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நான்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு அமரர் சீவேவிப்பிள்ளை அவர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

21.03.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.