;
Athirady Tamil News

கனடா தர்மிகாவின் பிறந்தநாளில், முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு “M.F” ஊடாக வாழ்வாதார உதவி (படங்கள்)

0

கனடா தர்மிகாவின் பிறந்தநாளில், முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு, வாழ்வாதார உதவி வழங்கியது, மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
############################

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தேராவில் கிராமத்தில் திலீபன் வீதியில் வசிக்கும் முன்னாள் போராளிகளான தம்பதிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும், குறித்த பிரதேச கிராமசேவகரது சிபார்சு வேண்டுகோளுகமைவாகவும் வாழ்வாதார உதவியாக நிரந்தரக் கோழிக்கூடு அமைத்துக் கொடுக்கும் வகையில் இன்றைய நாளில் பூர்வாங்கப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி முன்னாள் போராளிகளின் வாழ்வாதார உதவிக்கான வீடியோ பதிவை எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வட்சப் குழுமத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த வீடியோ பதிவை கேள்விப்பட்ட கனடா வாழ் தனது பெயரை சொல்ல விரும்பாத பெண்மணி ஒருவர் தனது மகள் செல்வி.தர்மிகா அவர்களின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு நிரந்தர கோழிக் கூடு அமைக்க தேவையான நிதியை செல்வி.தர்மிகாவின் சகோதரிகளான இலங்கையில் வசிக்கும் திருமதி கௌகிகா, கனடாவில் வசிக்கும் செல்வி திவ்விகா, திருமதி கௌசிகாவின் செல்வப் புதல்வி வெண்ணிலா ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு வழங்க முன்வந்துள்ளார்கள்.

குறித்த போராளித் தம்பதிகள் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் காயம்பட்டு உடல்வலு பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவது மேலதிகமாக குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் அவர்களிம் மூத்த மகள் யுத்த காயங்களினால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றவண்ணம் இருக்கிறார்.

இவர்கள் தமது அன்றாட வாழ்வாதார தேவையை ஈடு செய்யும் வகையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்னறர். அந்த கோழிகளை மிருகங்களிடமிருந்தும், கள்வர்களிடமிருந்தும் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஒரு நிரந்தர கோழிக் கூடு தேவை பற்றி குறித்த பகுதி கிராம சேவையாளர் அவர்களது சிபார்சுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதன் அடிப்படையில் இந்த நிதியுதவியினை பெயர் குறிப்பிட விரும்பாத கனடாவாழ் தாயொருவர் தனது மகளான செல்வி.தர்மிகாவின் பிறந்த நாளில் ஏனைய மகளான திருமதி கௌசிகா, செல்வி திவ்வியா கௌகிகாவின் மகளான வெண்ணிலா ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் உதவியுள்ளார்.

கனடா வாழ் செல்வி.தர்மிகாவின் பிறந்த நாளான இன்று மூங்கிலாறு தேராவில் கிராமத்தில் யுத்த காயங்களினால் உடல் வலுவிழந்த முன்னாள் போராளிகளது குடும்பத்தின் எதிர்கால வாழ்வாதார மேம்பாட்டுக்கான நிரந்தர கோழிக் கூட்டுக்கான பூர்வாங்கப் பணிகள் இன்று மன்றத்தின் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. விரைவில் இப்பணி நிறைவு செய்யப்பட்டு குறித்த குடும்பத்திற்கு கையளிக்கப்படவுள்ளது.

இவர்களுக்கு இவ்வுதவி கிடைக்க அரும்பாடுபட்ட அத்தனை உள்ளத்திற்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் இன்றைய பிறந்தநாளைக் காணும் செல்வி.தர்மிகா “சீரும் சிறப்புமாக நீடூழி வாழ்கவென” தனது பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
07.04.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.