;
Athirady Tamil News

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “M.F” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)

0

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “M.F” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ)
#################################

லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந் தனது பிறந்தநாளை தாயக உறவுகளோடு மகிழ்ந்து கொண்டாடினார்

புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி (ரோகிணி) தம்பதிகளின் ஏகபுத்திரன் செல்வன்.கிஷாந் அவர்களின் இன்றைய பிறந்ததினத்தை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொண்டாடியது

புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் அமரத்துவ மடைந்தவர்களான அமரர்கள் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் மூன்றாவது புதல்வியான லண்டனில் வசிக்கும் ரோகினி என அழைக்கப்படும் திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏகபுத்திரன் செல்வன் கிஷாந் அவர்களின் இன்றைய பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பி கேட்டுக் கொண்டதற்கமைய இன்று தாயக கிராமமொன்றில் பெருமளவிலான சிறுவர், சிறுமியர், பெற்றோர்கள் ஒன்று கூடி செல்வன்.கிஷாந் அவர்களின் பிறந்த நாளை பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடினார்கள்..

அதேவேளை கிஷாந் அவர்களின் பெற்றோர்களான திரு.திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகள் தங்களின் ஒரே புதல்வனின் பிறந்தநாள் நிகழ்வுக்கு வருகை தரும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் வேண்டுகோள் விடுத்ததின் பயனாக இன்றைய நாளில் லண்டன் கிஷாந் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திருமதி நவரத்தினம் பவளராணி அவர்கள் சிறப்பாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பிறந்த நாள் கேக் வழங்கப்பட்டு மாணவர்களின் நன்றியுரையுடன் லண்டன் கிஷாந் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனிதாக நிறைவு பெற்றது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

04.10.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + seventeen =

*