;
Athirady Tamil News

தந்தையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. படங்கள், வீடியோ)

0

தந்தையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. படங்கள், வீடியோ)

புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும் கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான “சொக்கர்” என அன்போடு அழைக்கப்படும் அமரர் திரு.முருகேசு சொக்கலிங்கம் அவர்களினதும், அவரின் பாரியாரான நாகேஷ் அக்கா என அன்போடு அழைக்கப்படும் அமரர் திருமதி சீதேவிப்பிள்ளை சொக்கலிங்கம் ஆகியோரின் நினைவாக அக்குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக மாணவ மாணவிகளின் கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளும், வயது முதிர்ந்த தந்தையர்களுக்கான உடுப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வன்னிப் பிரதேசத்தின் எல்லைக் கிராமங்களான இருவேறு கிராமங்களில் “தந்தையர் தினத்தை” முன்னிட்டு மேற்படி உதவிகளான மாணவ மாணவிகளின் கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளும், வயது முதிர்ந்த தந்தையர்களுக்கான உடுப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்குமான கூல் உணவும் வழங்கி வைக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருவதும், அதன் உயரிய நோக்கமாக “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..

தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து, சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் “நல்லிதயம் கொண்ட உறவுகளுக்கு” மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனைவருக்கும் “தந்தையர் தின” வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

19.06.2022

தந்தையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்…(வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.