;
Athirady Tamil News

சுவிஸ் ஈழதர்சனின் 25 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் ஈழதர்சனின் 25 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
#################################

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுத்திரன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் இருபத்தைந்தாவது பிறந்தநாள் விழாவினை இன்றையதினம் தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி செல்வபாலன் மனோகரி தம்பதிகள், தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு கடந்த சில வருடங்களாக உதவி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்டபுதல்வன் செல்வன்.ஈழதர்சனின் இருபத்தைந்தாவது பிறந்த நாள் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் இன்றையதினம் முதல் நிகழ்வாகக் கேக் வெட்டி தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது.

வன்னி எல்லைக் கிராம பிரதேசத்தில் உள்ள சில மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது மட்டுமல்லாமல்,

இன்றைய நாட்டின் பொருளாதார இக்கடடான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று பிறந்தநாள் காணும் செல்வன் ஈழதர்சனின் விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்டவர்களில், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இன்று பிறந்தநாள் காணும் செல்வன் ஈழதர்சனின் விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்டவர்களில், சிலருக்கு பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை தங்களது சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சனின் இருபத்தைந்தாவது அகவை நாளில் வவுனியாவின் கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள அம்பாள் முன்பள்ளி மாணவமாணவிகளுக்கான கற்றல் உபகரணங்களும், கூமாங்குளம் கிராமங்களில் மிகவும் வறிய நிலையில் வாழும் சில குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு பெறுமதிமிக்க உலருணவுப் பொதிகள், பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் நாளையதினம் செல்வன்.ஈழதர்சனின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நிகழ்வாக வழங்கி வைக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சன் அவர்களின் பிறந்த நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு ஏற்கனவே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே இன்றைய நாளிலும் பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு செல்வன்.ஈழதர்ஷனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக அரிசிப் பொதிகள், பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்ட்து எனவும், இவைகள் யாவும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” இன்றைய நாளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது எனவும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில் இனிதான பிறந்தநாளினைக் கொண்டாடும் சுவிஸ் செல்வபாலன் மனோகரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.ஈழதர்சனை அவரது பெற்றோர், அவரது மனைவி, அவரின் தம்பி யாழீஷன் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவதோடு அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும் பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”
தலைமையகம்,
வவுனியா, இலங்கை.

20.07.2022

சுவிஸ் ஈழதர்சனின் 25 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.