;
Athirady Tamil News

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ)

0

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ)
#####################################

யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் திருமண நிறைவாண்டு விழாவினை தாயக உறவுகள் இன்றையதினம் மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி சுதா செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் எந்தவொரு நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு உதவிகள் வழங்கி தொடர்ச்சியாக சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் சுவிஸ் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும், சமயத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. “சுதா செல்வி” தம்பதிகளின் திருமண நாளான இன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளம் எனும் கிராமத்தில் தாயக உறவுகளின் ஒன்றுகூடலில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் “சுதா செல்வி” அவர்களின் திருமண நிறைவு நாள் பெறுமதியான உலருணவுப் பொதிகள், பயன்தரு நல்லினத் தென்னைமரங்கள் போன்றவைகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மேற்படி நிகழ்வுக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரான தோழர்.பாரூக் அண்ணர் அவர்களின் மகனான திரு.கணேசலிங்கம் சிம்சுபன் அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் சிறுவர்கள் பெரியோர்கள் என பலரும் கூடி “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகளின் திருமணநாள் கொண்டாட்டம் கேக் வெட்டி, வாழ்த்துப்பா பாடி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி திருமண மங்கல நன்னாள் வாழ்த்துக்கள் கூறி இனிதாக கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றைய நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் ஒரு தொகையினருக்கு என அனைவருக்குமான, பெறுமதியான உலருணவுகள் அடங்கிய பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் அக்கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில், திரு.கணேசலிங்கம் சிம்சுபன் -தேசிய சம்மேளன பிரதிநிதி, இலங்கை இளைஞர் கழக சம்மேளனம்.. // திருமதி. சந்திரகுமார் சுபநந்தினி -உப தலைவர் – எல்லப்பர் மருதங்குளம் சமுர்த்தி சங்கம்.. // திருமதி. ஜோதிமுத்து ராஜேஸ்வரி -குழுத்தலைவி – எல்லப்பர் மருதங்குளம் சமுர்த்தி சங்கம்.. // திருமதி தயாபரன் மையூரணி – இணைப்பாளர் – சிறகுகள் இளைஞர் அமைப்பு.. // செல்வி ஜோதிமுத்து தன்ஷிகா – அமைப்பாளர் – யுரேனஸ் இளைஞர் அமைப்பு ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் இனிதான திருமண மங்கல நாளினை கொண்டாடும் சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளை விருந்திந்தினர்களும் சிறப்பாக வாழ்த்தியதுடன், தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துவதோடு, அவர்களின் நிதிப்பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்களுக்காகவும் வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

05.02.2023

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (வீடியோ)

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.