;
Athirady Tamil News

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
################################

யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் செல்வப் புதல்வன் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் விழாவினை தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி சுதா செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” தாயக உறவுகளுக்கு கடந்த பல வருடங்களாக உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் வாழ் திரு.திருமதி. சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் பிறந்தநாள் நிகழ்வினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் நடைபெற ஏற்பாடாகிய போதிலும் நாட்டின் கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சமளங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் ஆச்சிபுரம் கிராம பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிடுந்தனர்.

ஆச்சிபுரம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சமலங்குளம் கிராம சேவையாளர் திரு.சூரியகுமார் ஜெயப்பிரகாஷ் சமளங்குளம் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி.திவ்யா, ஆச்சிபுரம் சமுர்த்தி அமைப்பின் கணக்காய்வாளர் திருமதி அசோக்குமார் பிரியதர்ஷினி, இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதி திரு.கணேசலிங்கம் சிம்சுபன். ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அத்துடன் சமலங்குளம் கிராம சேவையாளர் திரு.சூரியகுமார் ஜெயப்பிரகாஷ் என்பவரின் ஏற்பாட்டில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மன்றத்தின் வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கில், இன்றைய செல்வன்.ஆதியின் பிறந்தநாள் நிகழ்வினை முன்னிட்டு அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறியதொரு நிதிப் பங்களிப்பு வழங்கி உடனடித் தேவைகள் சில வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற சுவிஸ் வாழ் திரு.திருமதி. சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் பிறந்தநாள் நிகழ்வினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒருங்கிணைப்பில் இன்று மதியம் வன்னி எல்லைக் கிராமமொன்றில், செல்வன் ஆதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம், கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி கிராமத்தின் அநேக சிறுவர்கள் ஒன்றுகூடி கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி இனிதாக கொண்டாடினர்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் செல்வன்.ஆதியின் பிறந்த நாள் கேக் உட்பட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது

சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன் ஆதி அவர்களின் பிறந்தநாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு செல்வன்.ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக பெறுமதிமிக்க உலருணவுப் பொதிகள் செல்வன் ஆதியின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் இனிதான பிறந்தநாளினை கொண்டாடும் வேளையில் அவரது பெற்றோர், தங்கைமார் அபி, அனு ஆகியோருடன் இணைந்து தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துவதோடு அவர்களின் நிதிப்பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும், பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

12.02.2023

சுவிஸ் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் பல்வேறு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“சுவிஸ் சுதா செல்வி” திருமண நாளில் உதவிகள் வழங்கலும், தாயக உறவுகளின் வாழ்த்துக்களும்.. (படங்கள், வீடியோ)

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.