;
Athirady Tamil News

தனது குடிமக்களை பொது இடத்தில் வைத்து எடை பார்க்கும் நாடு: எழுந்துள்ள விமர்சனங்கள்

0

துருக்கி நாடு, தனது குடிமக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிவதற்காக அவர்களை பொது இடத்தில் வைத்து எடை பார்க்கத் துவங்கியுள்ளது.

பொது இடத்தில் வைத்து…
நாட்டின் 81 மாகாணங்களிலுமுள்ள மால்கள், பேருந்து நிலையங்கள், கால்பந்து மைதானங்களுக்கு வெளியே, என பல இடங்களில் எடை மற்றும் உயரம் பரிசோதிக்கும் இயந்திரங்களுடன் நிற்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மக்களின் எடை, உயர விகிதத்தை பரிசோதிக்கிறார்கள்.

எடை அதிகம் உடையோர் தங்கள் எடையைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சரான Kemal memisoglu, நாட்டு மக்களில் 50 சதவிகிதம் பேர் அதிக எடையுடையவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அது மக்கள் நலனுக்கும் எதிர்கால சந்ததிக்கும் நல்லதல்ல என்று கூறும் அவர், ஆகவேதான் மக்களின் எடையை பரிசோதித்து, எடை அதிகம் உள்ளவர்களை எடை குறைக்க சுகாதார அலுவலர்கள் ஆலோசனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், அரசின் இந்த நடவடிக்கை தொடர்பில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மக்கள் விருப்பம் குறித்து யோசிக்காமல், அவர்களுடைய தனிப்பட்ட விடயங்களில் அரசு தலையிடுவதாகவும், அதிகரித்துவரும் உணவுப்பொருட்கள் விலை, அதிகரிக்கவே அதிகரிக்காத ஊதியம் முதலான விடயங்கள் குறித்து கவலைப்படாமல், மக்கள் எடை குறித்து அரசு கவலைப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.