ரஷ்யா, சீனாவுடன் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்ய ஆப்கானிஸ்தான் முயற்சி

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தங்கள் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தைத் தொடங்க ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைமையிலான அரசு, அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்க ரஷ்யா மற்றும் சீனாவுடன் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்ய currency-swap ஒப்பந்தங்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
இந்த தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ஆப்கான் வர்த்தகத் துறை அமைச்சர் நூருத்தீன் அசீசியை மேற்கோள் காட்டி வெளியிட்டது.
ரஷ்யாவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் முன்னேறிய நிலையில் உள்ளதாகவும், இரு நாடுகளின் வங்கிகள் டொலருக்கு மாற்றாக நாணய பரிமாற்றங்கள் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்பில் பரிவர்த்தனைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் சீனாவுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் தொடங்கி விட்டன. சீன தூதரகம் மற்றும் ஆப்கான் வர்த்தக அமைச்சகம் இணைந்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
2021-இல் தாலிபான் ஆட்சியை பிடித்த பிறகு, ஆப்கானிஸ்தான் பெரும்பாலான சர்வதேச நிதி வலையமைப்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதனால், எண்ணெய், எரிவாயு மற்றும் கோதுமை தேவையுள்ள பொருட்களுக்காக ரஷ்யாவுடன் வாணிப ஒப்பந்தங்களில் நம்பிக்கை வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், தாலிபான் கடந்த செப்டம்பரில் BRICS மாநாட்டில் கலந்து கொள்ள விண்ணப்பித்தது. ரஷ்யா தற்போது தாலிபான்கள் மீது விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாக உள்ள பட்டியலை நீக்க முயற்சி செய்து வருகிறது, மேலும் சீனா தாலிபான் தூதரை ஏற்கின்றது.
இந்த முயற்சிகள், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் புதிய வழிகளை தேடுவதற்கான தாலிபான் அரசின் முக்கியமான படியாக கருதப்படுகிறது.