;
Athirady Tamil News

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
################################

ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து
உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
ஆலாலகண்டணவன் பாதமதில் வாழ
விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ!

நல்லொழுக்க நாயகர்களாய்
பிள்ளைகளை வளர்த்தெடுத்து
அயல் வீட்டுப்பிள்ளைகளையும்
பாசத்தோடு அரவணைத்து
மருமக்கள் எங்களுக்கும் பாசம் காட்டி
பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய்
வாழ்ந்த தாயே!

உம் பிரிவினை எம்முள்ளம் எப்படித்தான் ஏற்கும்.
ஆண்டுகள் பல போனாலும் உங்கள்
நினைவுகள் அழிந்து போகாது…

வேலணையைச் சேர்ந்தவரும், அங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது இருபத்தாறாம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு அன்னாரின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சார்பாக அன்னாரின் மகனும் சுவிஸ் நாட்டில் வாழ்பவருமான திரு.சுதாகரன் அவர்கள் தனது தாயின் ஆண்டுத் திவசத்தை விசேட அன்னதான நிகழ்வுடன், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக ஒழுங்குபடுத்தி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, சுவிஸ் நாட்டில் புரூக்டோர்ப் எனுமிடத்தில் வதியும் திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி அன்னதான நிகழ்வு நடத்தப்பட்டது.

இன்று மதியம், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 26 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு வவுனியா கற்பகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவச் செல்லங்களுடன் இணைந்து இன்று அவரது நினைவாக விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது இப்பாடசாலையின் அதிபர் திரு.வா. பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில், ஆசிரியை திருமதி. ப. பிரபாகரன், திருமதி.இ. ஸ்ரீபாஸ்கரன், திருமதி.உ. லோகேஸ்வரன், திருமதி.க. இந்திரகுமாரி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கான முழுமையான ஒழுங்கமைப்பை மாணிக்கதாசன் நற்பணிமன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரும், சமூக சேவையாளருமான திருமதி. நவரெட்ணம் பவளராணி அவர்கள் சிறப்பாக நடத்தி இருந்தார்.

மேற்படி நிகழ்வில் இப்பாடசாலையின் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிலரும், ஆசிரிய சமூகமும் கலந்து சிறப்பித்ததுடன், இருபத்தாறாம் ஆண்டு அந்தியேட்டி நிகழ்வில் அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களுக்கு முதலில் ஒரு நிமிட மௌன வணக்க அஞ்சலி செலுத்தி தொடர்ந்து தேவார பாராயணம் பாடப்பட்டு அதனைத் தொடர்ந்து விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது

மேற்படி அன்னதான நிகழ்வானது அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பாக அன்னாரின் மகனான சுவிஸ் பேர்ண் பூர்க்டோர்ப் மாநிலத்தில் வசிக்கும் திரு.திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நெறிப்படுத்தும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” கலந்து கொண்ட அப்பாடசாலை அதிபர், ஆசிரியைகளினால் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருவதும், அதன் உயரிய நோக்கமாக “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..

இதேவேளை மேற்படி திரு.திருமதி சுதா, செல்வி ஆகியோரின் குடும்ப நிகழ்வுகள் எதுவென்றாலும், தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து, சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் “சமய, சமூகத் தொண்டர்களான” திரு.திருமதி. சுதாகரன் செல்வி தம்பதிகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”.. என்றும்
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

24.05 2023.

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.