;
Athirady Tamil News

துருக்கியை துரத்தும் கொரோனா – ஒரு கோடியைக் கடந்தது பாதிப்பு…!!!

0

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 65,236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 143 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 843 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 93.50 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.