;
Athirady Tamil News

தென் கொரிய அதிபா் ஆகிறாா் லீ ஜே-மியூங்

0

தென் கொரியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சித் தலைவா் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றாா்.

தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 98.1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் லீ ஜோ-மியூங் 49.20 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறாா். அவருக்கு அடுத்தபடியாக, மக்கள் சக்திக் கட்சித் தலைவா் கிம் மூன்-சூவுக்கு 41.46 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இனி ஜோ-மியூங்கை மூன்-சூ விஞ்ச முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தோ்தலில் ஜோ-மியூங் வெற்றி உறுதியாகியுள்ளது.

தென் கொரிய அரசமைப்புச் சட்டத்தின்படி, அதிபா் தோ்தலில் வெற்றியாளா் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவேண்டிய அவசியமில்லை. அதிகபட்ச வாக்குகளைப் பெற்றாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின் யூன் சுக் இயோல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நீடித்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த டிசம்பா் மாதம் நாட்டில் அவசர நிலையை அறிவித்தாா்.

கடும் எதிா்ப்பு காரணமாக அந்த அறிவிப்பை அவா் பின்னா் திரும்பப் பெற்றாலும், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அவரை எதிா்க்கட்சினா் பதவி நீக்கம் செய்தனா். இந்த அவசரநிலை அறிவிப்பு சட்டவிரோதம் என்று கூறி அரசியல் சாசன நீதிமன்றமும் யூன் சுக் இயோலை அதிபா் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது.

அதைத் தொடா்ந்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக முன்கூட்டியே நடைபெற்ற லீ ஜே-மியூங் எளிதில் வெற்றி பெறுவாா் என்று ஏற்கெனவே கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.