;
Athirady Tamil News

நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா!! (படங்கள், வீடியோ)

0

வரலாற்று சிறப்பு மிக்க நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூட்டுத்திருப்பலியுடான திருச்சூருவப்பவனி இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கோடி அற்புதராம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் ஆலயத்தின் திருஉருவ அந்தோனியாருக்கு விசேட திருப்பலி இடம்பெற்றதுடன் மேலும் பக்தர்களுக்கான விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ் கூட்டுத்திருப்பலியுடான திருச்சூருவப்பவனியினை யாழ் மறைமாவட்ட பங்குகுருமுதல்வர் ஜெபரட்ணம் அடியார் தலைமையிலான பங்குதந்தையினர்கள் ஒப்புகொடுத்தனர்.

இதனை தொடர்ந்து திருச்சூருவபவனி இடம்பெற்றதுடன் திருவிழாவின் கொடியிறக்கமும் இடம்பெற்றது

திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 23.03 இடம்பெற்று நான்காம் நாள் திருவிழாவில் இனிதே நிறைவடைந்தது

இவ்வாலயத்தில் கடந்த இரண்டுவருடங்களாக நாட்டில் எற்பட்டு கொரோனாத்தொற்று நிலைமை காரணமாக இடம்பெறவில்லை என்பதுடன் இவ்வாண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குருநகர்,பாசையூர் ,நாவாந்துறை ,கொழும்புத்துறை ஆகிய இடங்களில் இருந்து கடல்வழிமூலமாக வருகைதந்த கிறிஸ்தவபக்தர்கள் பலரும் கலந்துகொண்டு புனித அந்தோனியாரின் ஆசீர்வாதங்களை பெற்றுச்சென்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.