;
Athirady Tamil News

வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கி மோசடி- ஆந்திர முன்னாள் பெண் எம்.பி.க்கு 5 ஆண்டு ஜெயில்..!!

0

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆக இருந்தபோது தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் பேரில் வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து அப்பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் எம்.பி. கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகியோர் மீது ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கீதா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அதில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது நிரூபணமானதால் முன்னாள் எம்.பி.கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெய பிரகாஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து 4 பேரும் உஸ்மானிய ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் பரிசோதனை முடிந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.