;
Athirady Tamil News

10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை – தேடுதலில் அசிரத்தை!! (வீடியோ, படங்கள்)

0

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் மேற்குறித்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேற்குறித்த மீனவர்கள் காணாமல் சென்ற விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாவது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்டஈட்டையோ பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் இதுவரை முன்வரவில்லை.எனினும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

குறித்த விடயத்தை மனிதாபிமான நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டு குறித்த மீனவ குடும்பங்களிற்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டு கnhள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் 10 நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதுடன் கடந்த திங்கட்கிழமை (26) குறித்த படகில் சென்ற நிலையில் எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்த நிலையில் உள்ளனர்.

இதில் கல்முனையை சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ) , ஏ.பி கபீர் (வயது 50) ,எம்.என். ஹில்மி (வயது 33),ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போய் உள்ளனர்.

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தனியான தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.