தமிழக முகாமில் இருந்து வந்தவருக்கு பிணை
37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை அவர் கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த நபர் இன்றையதினம் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.