;
Athirady Tamil News

குஜராத் சட்டசபை தேர்தல் – சோனியா, ராகுல் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!!

0

பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 27 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதோரா, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், சச்சின் பைலட் உள்பட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.