;
Athirady Tamil News

லவ் ஜிகாத்திற்கு எதிராக நாட்டில் கடுமையான சட்டம் அவசியம்- அசாம் முதல்வர் வலியுறுத்தல்..!!

0

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை அவர் எழுப்பினார். அப்தாப் மும்பையில் இருந்து ஷ்ரத்தா என்ற சகோதரியை வரவழைத்து லவ் ஜிகாத் என்ற பெயரில் 35 துண்டுகளாக வெட்டினார். மேலும் அவர் அந்த உடலை குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். உடல் பாகங்கள் குளிர் சாதன பெட்டியில் இருக்கும்போது, ​​​​வீட்டிற்கு மற்றொரு பெண்ணை அழைத்து வந்து டேட்டிங் செய்யத் தொடங்கினார். ஏன் அவர் இந்து பெண்களை மட்டும் குறி வைத்து காதலில் வீழ்த்துகிறார் என போலீசார் விசாரித்தனர். ​​அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதால் அப்படி செய்வதாக அப்தாப் கூறியுள்ளார். இதனால்தான் லவ் ஜிகாத்க்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவை. மீண்டும் இது போன்ற சம்பங்கள் நிகழாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம். நாட்டின் ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள். நாட்டிற்கு சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை எங்களால் பாதுகாக்க முடியாது. அதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்குவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.