;
Athirady Tamil News

யாழ் பல்கலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக கருத்தரங்கு!! (PHOTOS)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை(09), பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரனும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், “தற்காலத்தில் போதை பொருள் பற்றிய நிலவரமும் அது தொடர்பான எமது நடவடிகைகளும்” பற்றி வைத்தியர் க.குமரனும், “மனித உரிமைகளும் போதைப் பொருளுக்கு அடிமையாதலும்” பற்றி முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனும், “போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பான சட்டம் சார்ந்த ஓர் அறிமுகம்” பற்றி குற்றவியல் நீதிமன்ற நீதவான் அ .ஆனந்தராஜாவும், “போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் உளவியல் அம்சங்கள்” பற்றி யாழ் போதனா வைத்திய சாலை மன நல வைத்திய நிபுணர் டி உமாகரனும் கருத்துரைகளை வழங்கினர்.

கருத்துரைகளை வழங்கிய நால்வருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.