;
Athirady Tamil News

டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ – பயணிகளின் நிலை என்ன?

0

ஹாங்காங்கிலிருந்து, டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ பற்றியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் தீ
ஹாங்காங்கிலிருந்து, ஏர் இந்தியா ஏஐ-315 விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது.

விமானம் தரையிறங்கியதும், பயணிகள் இறங்கி கொண்டிருக்கும் போது விமானத்தின் பின் பகுதியில் தீ பற்றியது.

இதனை கண்டு அலறிய பயணிகள் அவசர அவசரமாக வெளியே வந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.

விமானத்தின் துணை மின் உற்பத்திப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ பற்றியதும், துணை மின் உற்பத்திப் பிரிவு தானாகவே செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்
இந்த சம்பவத்தில் விமானத்தில் உள்ள பாகங்கள் லேசான சேதமடைந்தன. இது குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், பயணிகள், விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறியதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 12 ஆம் திகதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில், 241 பேர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் தீ பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.