;
Athirady Tamil News

மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் கைது

0

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாம் இணைப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டார்.

அதன்படி, சந்தேக நபரை தலா 2.5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.