;
Athirady Tamil News

அமெரிக்காவில் மாயமான கனேடிய சிறுமி… கிடைத்துள்ள துயரச் செய்தி

0

அமெரிக்காவின் நியூயார்க்கில் மாயமான ஒரு கனேடிய சிறுமி உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில், நியூயார்க்கிலுள்ள Lake George என்னுமிடத்தில் வாழும் கனேடியரான லூசியானோ (Luciano Frattolin, 45), தனது மகளான மெலினா (Melina Frattolin, 9)ஐக் காணவில்லை என பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

அவள் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கிடைத்துள்ள துயரச் செய்தி
இந்நிலையில், Ticonderoga என்னுமிடத்தில், மெலினாவின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மெலினாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.