;
Athirady Tamil News

அபராதத்தொகை செலுத்த மாதம் ரூ.9.7 லட்சம் கடன் வாங்கும் நிரவ் மோடி- லண்டன் நீதிமன்றத்தில் தகவல்!!

0

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் சிக்கிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் தப்பியோடினார். பணத்தை திருப்பி செலுத்தாததால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வங்கி தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். லண்டனில் உள்ள வான்ட்ஸ் வொர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அதற்கான செலவுத் தொகையை நிரவ் மோடியே செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நிரவ் மோடி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு லண்டனில் உள்ள பாக்கிங்சைட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொலி மூலம் ஆஜரான நிரவ் மோடி தன்னை நாடு கடத்துவதற்கு எதிரான மேல் முறையீட்டுக்கான செலவு தொகை 150,247 பவுண்டுகள் (ரூ.146 லட்சம்) செலுத்த பணம் இல்லை. என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது . எனவே என்னால் பணம் செலுத்த முடியவில்லை என்றார். அப்போது நீதிபதிகள் அவரிடம் சொத்துக்கள் ஏன் முடக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி பதில் அளிக்கையில், எனது பெரும்பாலான சொத்துக்கள் இந்தியாவில் உள்ளன.

அங்கு நான் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக எனது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்றார். அப்படியென்றால் அபராதத்தொகையாக மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.9.7 லட்சம்) எப்படி செலுத்திகிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிரவ்மோடி கூறுகையில், “நான் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு சிறையில் இருக்கிறேன். எனது முதல் 2 வருடங்களில் கையில் இருந்த நிதி செலவாகிவிட்டது.

எனவே கடந்த 2 ஆண்டுகளாக நான் மாதம் 10 ஆயிரம் பவுண்டுகள் கடன் வாங்கி அபராதம் செலுத்துகிறேன் என்றார். உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை என்றால் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ஏன் இந்தியாவிற்கு திரும்பவில்லை என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு நிரவ் மோடி எனக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை கிடைக்காது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.