;
Athirady Tamil News

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய பெண் – காலில் விழுந்து மன்னிப்பு கோரிய வீடியோ!

0

ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செருப்பால் தாக்கிய பெண்
பெங்களூரு, பெல்லந்தூர் பகுதியில், ஒரு இளம்பெண் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ அவர் மீது லேசாக உரசியுள்ளது.

இதனால் கோபமடைந்த அந்த பெண், ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென அந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை தனது செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், இந்தியில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

காலில் விழுந்து மன்னிப்பு
இதனை ஆட்டோ ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அது வெளியாகி நிலையில், இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தொடர்ந்து, ஆட்டோ டிரைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த பெண் கைது செய்யப்பட்டு பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், வடமாநில பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.