யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக சுற்றாடல் வாரமானது மே 30 ஆம் திகதிமுதல் யூன் மாதம் 5 ஆம் திகதி வரை கொண்டாடப்படுகிறது.
இதனடிப்படையில் இன்று காலை 6:45 மணிமுதல் காலை 8:30 மணிவரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் தவகிருபா தலைமையில் இடம்பெற்றது.
இதன் பொழுது பண்ணை கடற்கரை வளாகத்தில் காணப்பட்ட கழிவுகள் தரம்பிரிக்கபட்டு தூய்மை படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், அனர்த்த முகாமைத்துவ மாவட்ட பிரதி பணிப்பாளர் சூரியராஜா , விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி டி.எல் .இகலகமகே, மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், யாழ் பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் ,கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள் , உத்தியோகத்தர்கள், சுற்று சூழல் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.