முப்பரிமாண ஏவுகணையை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வி!

உலக வரலாற்றில் முப்பரிமாண (3D) அச்சைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணில் செலுத்த நிபுணர்கள் முயற்சி செய்துள்ளனர்.
ஸ்பெஸ்க்கிராப்ட் (Spacecraft) தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குறித்த ஏவுகணை 85 சதவீதம் முப்பரிமான தோற்றமுடையது.
இது வெற்றிபெற்றிருந்தால் பெரும் சாதனையாக அமைந்திருக்கும், இருப்பினும் குறித்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
ஏவுகணையின் விசை செயல்படாமை, ஏவுகணைக்குள் இருந்த கணினி பாதியில் செயலிழந்தமை மற்றும் உள்பாகம் ஒன்று பழுதடைந்தமை போன்ற காரணங்களால் குறித்த சோதனை முயற்சி தோல்வியடைந்தது.