;
Athirady Tamil News

விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப் போனும் விற்றுத்தீர்ந்தது – சியோமி வெளியிட்ட தகவல்!!

0

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 ப்ரோ Early Access விற்பனை இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஸ்மர்ட்போன் Mi வலைத்தளம், Mi ஹோம் மற்றும் Mi ஸ்டூடியோக்களில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விற்பனை துவங்கிய நிலையில், புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க பலர் ஆர்வம் செலுத்தியதை அடுத்து நல்ல வரவேற்பு கிடைத்ததாக சியோமி தெரிவித்து இருக்கிறது.

மேலும் தற்போது சியோமி 13 ப்ரோ ஸ்டாக்குகள் அனைத்து விற்றுத் தீர்ந்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், நேற்றைய விற்பனையில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரங்களை சியோமி இதுவரை அறிவிக்கவில்லை. சியோமி 13 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை மார்ச் 10 ஆம் தேதி துவங்குகிறது. அடுத்த விற்பனை சியோமி வலைத்தளங்கள் மற்றும் ஸ்டோர்களில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுமா அல்லது மூன்றாம் தரப்பு ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்குமா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சியோமி 13 ப்ரோ மாடலுக்கான அடுத்த விற்பனை நடைபெறுகிறது. சியோமி 13 ப்ரோ அம்சங்கள்: 6.73 இன்ச் 3200×1440 பிக்சல் QHD+ E6 AMOLED, 120Hz டிஸ்ப்ளே டால்பி விஷன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் அட்ரினோ 740 GPU 12 ஜிபி ரேம் 256 ஜிபி, 512 ஜிபி மெமரி டூயல் சிம் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 50MP பிரைமரி கேமரா 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் 50MP டெலிபோட்டோ கேமரா 32MP செல்ஃபி கேமரா இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி 4820 எம்ஏஹெச் பேட்டரி 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் விலை விவரங்கள்: சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் மாத தவணை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு வைத்திருப்போர் ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். சியோமி 13 ப்ரோ மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.