;
Athirady Tamil News

சகோதரத்துவ தினம்: சோஷலிசம் இளைஞர் சங்கம் நாளை யாழ் தேவி ரயிலில் யாழ்ப்பாணம் வருகை!

0

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு நாளைய தினம் புதன்கிழமை சோஷலிசம் இளைஞர் சங்கம் யாழ் தேவி புகையிரததில் நாளைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நாளை காலை 06,40 மணிக்கு பயணம் ஆரம்பமாகி, மாலை 2 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையத்தில் நூல்களும், வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதுபோன்று அநுராதபுர புகையிரத நிலையத்திலும் , நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும், யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும். அங்கு கலாசார நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் வியாழக்கிழமை எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன், எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.