;
Athirady Tamil News

டேய் எப்புட்றா! 180 டிகிரிக்கு பாதத்தை பின்னோக்கி திருப்பி அமெரிக்க பெண் சாதனை.. கின்னஸில் கெல்சி! !

0

ஆஹா! அமெரிக்காவில் நியூ மெக்சிகோவில் 32 வயது பெண் ஒருவர் தனது ஒரு பாதத்தை கிட்டதட்ட 180 டிகிரிக்கு திருப்புகிறார். மேலும் இந்த சாதனைக்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். என்ன ஒன்று அவை நம்மில் மறைந்திருக்கும். அது ஏதாவது ஒரு சூழலில் வெளியே வரும். அதை நாமோ அல்லது நம் மீது அக்கறை கொண்டவர்களோ கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்தால் அதை பயன்படுத்தி என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.

நாம் செய்யும் சாதனை மேற்கண்ட சாதனை பதிவு செய்வோரின் தகுதிகள், விதிகளை பூர்த்தி செய்தால் அதில் நமது பெயரும் இடம் பெறும். அந்த வகையில் நியூ மெக்சிகோவை சேர்ந்த பெண் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். 32 வயதான கெல்சி கிரப் தனது பாதத்தை 180 டிகிரி அளவுக்கு திருப்பி சாதனை படைத்துள்ளார். பாதங்களை நம்மால் ஓரளவுக்கு பக்கவாட்டில் திருப்ப முடியும். ஆனால் கெல்சியோ அப்படியே பின்பக்கம் திருப்புகிறார். ஒரு கால் முன்பக்கம் பார்த்த படியும் மறு கால் பின்பக்கம் பார்த்த மாதிரியும் வைத்திருக்கிறார். இந்த திறமை அவருக்குள் இருக்கிறது என்பதை தூண்டி விட்டதே அவருடன் பணியாற்றும் ஊழியர் மூலமாகத்தான். டிவிஎஸ் எமரால்ட்- கொலம்பியா பசிபிக் குழுமத்தின் சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்..

சென்னையில் அறிமுகம் டிவிஎஸ் எமரால்ட்- கொலம்பியா பசிபிக் குழுமத்தின் சீனியர் லிவிங் ப்ராஜெக்ட்.. சென்னையில் அறிமுகம் கெல்சி நியூ மெக்சிகோவில் ஒரு நூலகத்தில் பணியாற்றி வருகிறார். அப்போதுதான் அந்த நூலகத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு உலக சாதனைப் படைத்தோரின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வந்தது. அதை அவருடன் பணிபுரியும் ஊழியர் சும்மா ரேண்டமாக ஒரு பேஜை ஓப்பன் செய்தார். அப்போது அதில் பாதத்தை திருப்பி சாதனை புரிந்தவர் குறித்து விவரங்கள் இருந்தன. அதனால் ஒரு பேப்பரின் மேல் நின்று கொண்டிருந்த போது கெல்சி தனது பாதத்தை திருப்ப முயற்சித்தார். அப்போது அவரால் முடிந்தது. இதனால் எப்படியும் உலக சாதனையை முறியடிக்க நல்ல சந்தர்ப்பம் என்பதை கருதினார். பாதத்தை பின்பக்கம் திருப்புவதை எப்படி அளவிடுவார்கள் என்று கூட கெல்சிக்கு தெரியாது. ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் செய்தார்.

தலைகீழா மாறுதே! போன வாரம் காங்கிரஸ்.. ஆனால் இப்போ? கர்நாடகாவில் அரியணை ஏறும் பாஜக?டிவி9 புது சர்வேதலைகீழா மாறுதே! போன வாரம் காங்கிரஸ்.. ஆனால் இப்போ? கர்நாடகாவில் அரியணை ஏறும் பாஜக?டிவி9 புது சர்வே இதுகுறித்து கெல்சி கூறுகையில் என்னால் பாதத்தை திருப்புவதற்கு நன்கு வளையும் தன்மையுடன்தான் இருந்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் பாதத்தை 90 டிகிரிக்கு மேல் திருப்ப முடியும் என்பதை நான் நினைத்திருந்தேன். நான் அதற்கான முயற்சிகளை கூட எடுக்கவில்லை. நான் ஐஸ் ஸ்கேட்டிங் சென்ற போது என்னால் எனது பாதத்தை நகர்த்தாமலேயே திருப்ப முடிந்தது அறிந்தேன். நான் இதை எல்லோரிடமும் சொன்ன போது யாரும் நம்பவில்லை.

நான் பாதத்தை திருப்பிய போதுதான் அனைவரும் நம்பினார்கள். மேலும் என்னால் கின்னஸ் சாதனையை முறியடிக்க முடியும் என நம்பிக்கையும் கொடுத்தனர். இதுகுறித்து கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். ஏற்கெனவே சாதனை படைத்தவர் ஒரு ஆண். அவரும் அமெரிக்காவில் உதாவை சேர்ந்த ஆரான் ஃபோர்டு ஆவார். அவரால் 173.03 டிகிரி வரை பாதத்தை பின்பக்கம் திருப்பி சாதனை படைத்திருந்தார். பெண்களில் நான் 171.4 டிகிரி வரை திருப்பி உலக சாதனை பட்டியலில் பெண்கள் பிரிவில் இடம் பிடித்தேன். இவ்வாறு கெல்சி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.