;
Athirady Tamil News

“இவனுக்கும் ஒரு பாயாசத்தை போட்ற வேண்டியதுதான்..” கணவரை கொன்றுவிட்டு பாவ நாடகம் போட்ட மனைவி! ஷாக்!!

0

அமெரிக்காவில் பெண் ஒருவர் கணவரை இழந்த வேதனையில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், இதில் விசாரணையில் பெரிய ட்விஸ்ட் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா என்பது பல வினோத சம்பவங்கள் நடக்கும் ஒரு இடம். இயந்திரமயமான வாழ்க்கை, தனித்து வாழ்வது உள்ளிட்ட காரணங்களால் அங்கே பலரும் அழுத்தமான மனநிலையிலேயே இருக்கிறார்கள்.

இதனால் அங்கே சிறு சிறு விஷயங்களுக்கும் கூட விபரீதமான முடிவை எடுத்துவிடுவார்கள்.. அதுபோன்ற ஒரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. இதைப் படித்த நெட்டிசன்கள் வாயடைத்துப் போய்விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஷாக் சம்பவம்: அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் தான் தனது கணவரை இழந்திருந்தார். கணவர் இழந்த பிறகு துக்கத்தில் இருந்த அந்த பெண், தனது துக்கத்தைப் பகிரும் வகையில் குழந்தைகளுக்குப் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இதற்கிடையே இப்போது அந்த பெண் திடீரென கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உட்டா மாகாணத்தில் சம்மிட் கவுண்டியைச் சேர்ந்தவர் கூரி டார்டன் ரிச்சின்ஸ். 34 வயதான இந்தப் பெண் கணவர் எரிக் ரிச்சின்ஸ் என்பவரை விஷம் வைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மூன்று குழந்தைகளின் தாயான இவர், பரஸ்ட் டிகிரி கொலை குற்றச்சாட்டில் கைதாகியிருக்கிறார். இது மட்டுமின்றி விஷயத்தை வைத்திருந்தது உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

காப்பாற்ற முடியவில்லை: டார்டனின் கணவர் எரிக் கடந்த 2022 மார்ச் 4ஆம் தேதி உயிரிழந்தார். அன்றைய தினம், இரவு சுமார் 3:20 மணியளவில் போலீசாருக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. அவர்கள் எரிக் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்த போது, எரிக் மயக்க நிலையிலிருந்துள்ளார். அவரை காக்க போலீசார் நடவடிக்கை எடுத்த போதிலும், எரிக்கை காப்பாற்ற முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த காலை செய்ததே அவரது மனைவிதானாம். தனது கணவருக்குக் கலவையான ஓட்கா பானத்தை கொடுத்ததாகவும் அதன் பின்னர் இப்படி நடந்துவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவர் fentanyl ஓவர்டோஸால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த அபாயகரமான fentanyl மருந்தை அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக அவர் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

விசாரணையில், டிசம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை பல நேரங்களில் அந்த பெண் fentanyl மருந்தை வாங்கியதும் தெரிய வந்தது. மேலும், ஹைட்ரோகோடோன் உள்ளிட்ட ஆபத்தான மருந்துகளையும் வாங்கியது தெரிய வந்தது.

கடும் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளை வாங்கி மூன்று நாட்கள் கழித்து அந்த தம்பதி டின்னர் சென்றுள்ளனர். அதன் பின்னர் தான் அந்த கணவர் முதலில் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன் பிறகு மேலும் மேலும் fentanyl மருந்தை வாங்கி கணவரின் உணவில் மிக்ஸ் செய்து கொடுத்து வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் கடந்த மார்ச் 4ஆம் தேதி அவரது கணவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அந்த பெண் இதற்குப் பிறகு செய்தது தான் அல்டிமேட். அதாவது அன்புக்குரியவர்கள் இழந்தால் எப்படி அதில் இருந்து மீள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அந்த பெண் “Are You With Me?” என்ற குழந்தைகளுக்குமான புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “குழந்தைகளுக்கு அமைதியைத் தர வேண்டும் என்றே இந்தப் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன். எங்கள் குடும்பம் மட்டுமின்றி பலரும் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதில் இருந்து மீண்டு வர இது உதவும்” என்று கூறியிருந்தார் ஆனால், கடைசியில் அவரே தனது கணவரைக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.