;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு தொடர் சரிவு- புதிதாக 656 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பாதிப்பு நேற்று 801 ஆக இருந்த நிலையில் இன்று 656 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 82 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2,100 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 304 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 13,037 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று 9 பேர், கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் என 12 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.