பிரதேசசபை பெண் உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்
கம்பஹா, வெலிவேரிய, எம்பரலுவ பிரடீதசத்தில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா பிரதேச சபை உறுப்பினர் தனுஜா ஸ்ரீயந்தியின் வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் மேற்கொள்ளும் காட்சிகள் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் தனுஜா ஸ்ரீயந்தி கம்பஹா பொலிஸில் முறைப்பாடு அளித்ததுள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.