யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்
யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில், இதயம் செயலிழப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.