தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தும் , லொறியும் மோதி விபத்து; தப்பிய உயிர்கள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (13) காலை பேருந்தும் , லொறியும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்து காரணமாக அந்த நேரத்தில் மாத்தறை நோக்கிய திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனினும் விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், தற்போது போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.