பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலியில் அமுலுக்கு வரும் போக்குவரத்து நடைமுறை
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் ஆடியபாதம் வீதியில் இராமசாமிப் பரியாரியார் சந்தியில் இருந்து திருநெல்வேலிச் சந்தி நோக்கி கனரக வாகனங்கள் மட்டும் உள்நுழைவதற்கு தடைசெய்து செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.