;
Athirady Tamil News

ரூபாய் வீழ்ச்சி எதிரொலி: 33 சதவீத பாகிஸ்தானியர்கள் கிரிப்டோவில் முதலீடு!!

0

கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டடு மக்கள் டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு சென்றார்கள். பொருளாதார சிக்கலில் சில நாடுகள் சிக்கித் தவித்ததாலும் கிரிப்டோகரன்சியின் பரிமாற்றம் விஸ்பரூபம் அடைந்தது. இதனால் பிட்காய்ன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இனிமேல் கிரப்டோகரன்சிதான் என்று கூறப்பட்டது. சில நாடுகள் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் வெளிவருவது குறைந்துவிட்டது. பாகிஸ்தானில் அரசியல் நிலையற்றத் தன்மை காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

உலகளவில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்த வண்ணம் உள்ளது. இதனால் பாகிஸ்தானியர்களின் பெரும்பாலானோர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களில் 10 பேரில் ஒருவர் பணத்தை பெறுவதும், சம்பளம் செலுத்துவதையும் கிரிப்டோ கரன்சி மூலம் பரிமாற்றம் செய்ய விரும்புகிறார்கள் என குகாய்ன் என்ற உலகாளவிய கிரிப்டோகரன்சி எக்சேஞ்ச் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 5 மில்லியன் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30 சதவீதம் பேர் புது முதலீட்டார்களாக சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானிய முதலீட்டார்களில் 40 சதவீதம் பேர் 30 ஆயிரம் அல்லது 100 டாலருக்கு குறைவாக முதலீடு செய்துள்ளனர்.

இதில் 18 வயது முதல் 25 வயதுள்ள முதலீட்டாளர்கள் 35 சதவீதம் பேர். தற்போது குறைவான பணம் முதலீடு செய்தாலும் பிற்காலத்தில் கிரிப்டோ கரன்சி முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை யூகித்து முதலீடு செய்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் வங்கி இதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. டிஜிட்டல் பரிமாற்றம் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. அதில் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கூறுவது மிகவும் கடினம் என்றாலும், தற்போது பாகிஸ்தானின் முதலீட்டாளர்களின் மதிப்பு 18 பில்லியன் டாலர் முதல் 25 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.