வவுனியா புளொட் நினைவில்லத்தில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு.. (முழுமையான படங்கள், வீடியோ)

வவுனியா புளொட் நினைவில்லத்தில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு.. (முழுமையான படங்கள், வீடியோ)
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் உமாமகேஸ்வரன், மரணித்த கழகக் கண்மணிகள், சக அமைப்புப் போராளிகள், ஆதரவாளர்கள், மற்றும் அனைத்து பொதுமக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட கிளையினரால் வவுனியாவில் உள்ள புளொட் செயலதிபர் நினைவில்லத்தில் இன்று (16-07-2024) மாலை நான்கு மணியளவில் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் நடைபெற்றது. புளொட் தொழிற்சங்கப் பொறுப்பாளர் காண்டீபன் தொகுத்து வழங்கினார்.
மேற்படி நிகழ்வி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்கள் முதலில் கழகக் கொடியை ஏற்றி வைத்து, அதனைத் தொடர்ந்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து, உயிர்நீத்த தோழர்களுக்கு மலர் மாலை அணிவித்தும்,விளக்கேற்றியும் அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் புளொட் தலைவர் சித்தார்த்தன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன், உபதலைவர் கேசவன், உபதலைவர் தயாபரன், நிதிப் பொறுப்பாளர் பவான், தொழிற்சங்கப் பொறுப்பாளர் காண்டீபன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளர் குருபரன், புளொட் மத்தியகுழு உறுப்பினர்கள் சிவம், சூரி, கஜதீபன், கௌதமன் உட்பட புளொட் முக்கியஸ்தர்கள் குகன், யோகன், ஆட்டோசங்க ரவி, மன்னார் சிவசம்பு, தம்பா ரவி, யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர் தர்ஷானந்த், ஓசை, வவுனியா மாவட்ட செயலாளர் மூர்த்தி, சிவா, தமிழ் விருட்ஷம் கண்ணன், சமூக ஆர்வலர் மாணிக்கம் ஜெகன், மற்றும் கோயில் தலைவர்கள், ஊர்ப்பெரியோர், மற்றும் புளொட் தோழர்கள் ஆதரவாளர்களுடன் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
வவுனியா புளொட் நினைவில்லத்தில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு.. (வீடியோ)
வவுனியாவில் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திருஉருவச்சிலை திறப்பு (முழுமையான படங்கள் வீடியோ)
“புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த, வரலாற்றில் ஒரு பகுதி… (படங்கள்)
“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்)
கழகத்தின் (புளொட்) பின்தள ஆயுதப் பயிற்சியின் முழுமையான வீடியோக்கள்..