வவுனியாவில் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திருஉருவச்சிலை திறப்பு (முழுமையான படங்கள், வீடியோ)
வவுனியாவில் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திருஉருவச்சிலை திறப்பு (படங்கள் வீடியோ)
“மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி” தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர். கதிர்காமர் உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 35வது “நினைவு தினத்தை” (16.07.2024) முன்னிட்டு அவரது திருஉருவச் சிலையானது வவுனியா நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அண்மையில் நிறுவப்பட்டு, இன்றையதினம் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு.சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் புளொட் தலைவர் சித்தார்த்தன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன், டெலோ முக்கியஸ்தர் மயூரன், உபதலைவர் கேசவன், தொழிற்சங்கப் பொறுப்பாளர் காண்டீபன், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளர் குருபரன், புளொட் மத்தியகுழு உறுப்பினர்கள் சிவம், சூரி, கஜதீபன், தயாபரன், கௌதமன், உட்பட புளொட் முக்கியஸ்தர்கள் குகன், யோகன், ரவி, மன்னார் சிவசம்பு, மூர்த்தி, தமிழ் விருட்ஷம் கண்ணன், சமூக ஆர்வலர் மாணிக்கம் ஜெகன், குமாரசாமி கோயில் தலைவர்கள், ஊர்ப்பெரியோர், மற்றும் புளொட் தோழர்கள் ஆதரவாளர்களுடன் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
மேற்படி திருஉருவச் சிலையை அமைப்பதுக்கான பாரிய முயற்சியை புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் பாரிய முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டு இருந்தது, இவருடன் புளொட் தொழிற்சங்க பொறுப்பாளரும், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.காண்டீபன் அவர்களும் முழுமுயற்சி எடுத்து இருந்தார்.
இதன் பின்னர் செயலதிபரின் திருஉருவச் சிலையை நிறுவுவதுக்காக அமெரிக்க புளொட் தோழர்.கோபியும் அவருடன் இணைந்து அவரது நண்பர்களான இன்னும் சிலரும் பாடுபட்டு இருந்தனர். அத்துடன் புளொட் செயலதிபர் தோழர். உமா மகேஸ்வரன் அவர்களின் திரு உருவச்சிலையை நிறுவுவதுக்கான பெருமளவு நிதி உதவியை கனடா தோழர்.குணபாலன், அமெரிக்கா தோழர்.கோபி, பிரான்ஸ் தோழர்.தயாளன் ஆகியோரும், தம்மால் முடிந்த நிதி உதவிகளை சுவிஸ் தோழர்களான செல்வபாலன், தேவண்ணர், ரமணன், பேர்ண் தயா, அன்ரன், சுவிஸ்ரஞ்சன் ஆகியோரும் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திருஉருவச்சிலை திறப்பு (வீடியோ)
























































































“புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் குறித்த, வரலாற்றில் ஒரு பகுதி… (படங்கள்) https://www.athirady.com/tamil-news/infomation/1449717.html
“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்) https://www.athirady.com/tamil-news/infomation/1449708.html
கழகத்தின் (புளொட்) பின்தள ஆயுதப் பயிற்சியின் முழுமையான வீடியோக்கள்.. https://www.athirady.com/tamil-news/infomation/1530400.html