;
Athirady Tamil News

அதிகரிக்கும் வெப்பநிலை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொதுமக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (23.2.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போதிய நீர் ஆகாரங்கள்
இதனால், போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும் ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அவ்வாறே வயோதிபர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது தொடர்பாக விசேட கவனத்துடன் செயற்படுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளை அல்லது இள நிறங்களில் மற்றும் இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் கனரக வேலைகளில் ஈடுபடுவதில் இருந்து முடிந்த வரை கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.