காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து
காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (09) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவியதையடுத்து, இது குறித்து காவல்துறை அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையும், காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுள்ளனர்.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.