;
Athirady Tamil News

மனைவி உயிரைக் காப்பாற்றிய கிழங்கு – நெகிழ்ச்சி சம்பவம்!

0

மனைவியின் சிகிச்சைக்காக நபர் ஒருவர் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டினார்.

மனைவியின் சிகிச்சை
சீனா, ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜியா சாங்காங்(35). இவரது மனைவி லி. இவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

பள்ளியிலிருந்தே காதலித்து மணம் முடித்த இந்தத் தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவியின் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்காக ஜியா ஏற்கனவே 3.5 லட்சம் யுவான் (சுமார் ₹41 லட்சம்) செலவு செய்துவிட்டார்.

அடுத்தகட்டமாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு மேலும் பல லட்சங்கள் தேவைப்பட்டதால், ஜியா வீதியோரம் அமர்ந்து சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்கத் தொடங்கினார்.

நிதி திரட்டல்
இதனை சமூக வலைதளம் அறிந்த ஃபாங் என்ற நபர், ஜியாவைத் தொடர்பு கொண்டு தன்னிடம் உள்ள 50 டன் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை இலவசமாகத் தருவதாகக் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த இளைஞன் மிகவும் பொறுப்பானவன்.

கடினமான காலத்தில் இருக்கும் அவருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சாமானிய மக்களும் உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில் “நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் குழந்தை வளர்வதைப் பார்க்க வேண்டும், அதுதான் எங்களின் ஒரே ஆசை” என ஜியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.