160 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்ப கோளாறு
டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணம் ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
160 பேருடன் நேற்று (21) மாலை அந்த விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்றபோது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பயணம் ஒத்தி வைக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். தொழிநுட்பக் கோளாறை சரிசெய்யும் வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை கடந்த மாதம் குஜாரத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.