இலங்கைக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் கத்தார்
‘டித்வா’ சூறாவளியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக கட்டார் அரசாங்கம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் மரியம் பிந்த் அலி பின் நாசர் அல் மிஸ்னத் மற்றும் இலங்கையின் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.