அறுபதாவது அகவையை ஆனந்தமாகக் கொண்டாடினார் புங்குடுதீவு சுவிஸ் குழந்தை.. (படங்கள், வீடியோ)
அறுபதாவது அகவையை ஆனந்தமாகக் கொண்டாடினார் புங்குடுதீவு சுவிஸ் குழந்தை.. (படங்கள், வீடியோ)
###################################
புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் வி.அருணாசலம் சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயத் தொண்டரும், சமய சமூக சேவையை முன்னின்று செய்பவருமான சுவிஸில் வதியும் குழந்தை எனும் திரு.வி.அ.கைலாசநாதன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் கொண்டாட்டம் வன்னி எல்லைக் கிராமத்தில் இயற்கையான சூழலில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் சிறுவர்கள் ஒன்று கூடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
குழந்தை எனும் திரு.வி.அ.கைலாசநாதன் அவர்களின் அறுபதாவது பிறந்ததினம் தாயகத்தில் மிக மகிழ்ச்சியாக பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.. சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குழந்தை அவர்களின் அறுபதாவது பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து சிறுவர்களுக்கும் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தை எனும் திரு.வி.அ.கைலாசநாதன் அவர்களின் அறுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி திரு.திருமதி. வி.அ.பஞ்சலிங்கம் அன்னாம்பாள் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ் குழந்தை அவர்களது அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தம்பி பஞ்சலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் அக்கிராமத்தில் இருந்து கலந்து கொண்ட மக்களின் விருப்பத்துக்கு இணங்க மாலைநேர வகுப்புகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகளுக்கு கற்றலுக்கான உபகாரணங்களாக அப்பியாசக் கொப்பிகளும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்* வேண்டுகோளுக்கு இணங்க சுவிசில் வசிக்கும் குழந்தை எனும் திரு.வி.அ.கைலாசநாதன் அவர்களின் அறுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா சுந்தரபுரம் கிராம பிரிவில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சுவிசில் வசிக்கும் குழந்தை எனும் திரு.வி.அ.கைலாசநாதன் அவர்களின் சார்பாக மாணவர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் காளிமுத்து சசிகரனின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் ஆசிரியர் திருமதி. மயிலவாகனம் ராஜேஷவரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் சில கோரிக்கைகள் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கையினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிறைவேற்றுக் குழுவின் அனுமதியுடன் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதற்கு நிதிப்பங்களிப்பு செய்த சுவிஸ் குழந்தையின் தம்பியான திரு.திருமதி பஞ்சலிங்கம் அன்னாம்பாள் அவர்களது குடும்பத்திற்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் அறுபதாவது பிறந்தநாள் கொண்டாடும் திரு.குழந்தை அவர்களை, தாயக உறவுகளோடு இணைந்து “தேக ஆரோக்கியமாக எந்நாளும் மகிழ்ச்சியாக சந்தோசமாக நீண்ட ஆயுலோடு இறைவன் ஆசியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
05.08.2025
அறுபதாவது அகவையை ஆனந்தமாகக் கொண்டாடினார் புங்குடுதீவு சுவிஸ் குழந்தை.. (வீடியோ)


















































“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos